Price: ₹300.00
(as of May 03, 2025 06:28:42 UTC – Details)
நா.. நான் ஆராதனா பேசறேன்.”
“ம்ம்.. சொல்லுங்க.”
“அ.. அது.. நா….”
“பிளிஸ், எனக்கு நிறைய வேலை இருக்கு, சொல்ல வந்தத.. சீக்கிரம் சொல்லுங்க.”
“அ.. அது… இதத் தவிர வேற வழி இல்லையா?”
“நீங்க தான் என்னைத் தேடி வந்தீங்க, ஹெல்ப் வேணும்னு கேட்டீங்க. நானும் பண்ணி தரேன்னு சென்னேன். அதுக்கான விலை என்னன்னும் சொல்லி விட்டேன். நான் எதுக்கும் உங்கள கட்டாயப்படுத்தல, உங்க விருப்பம் தான். வேற…”
“எ.. எனக்கு சம்மதம்.”
“ம்ம்…. அப்ப நாளைக்கு காலையில நான் சொல்ற அட்ரஸ் பார்த்து வந்துடுங்க.” என்றவன் ஃபோனை வைத்து விட.
தன் கையில் இருந்த அலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், ஆராதனா.
“மேடம், நீங்க..”
“நா… நான் ஆராதனா, சா… சார் வரச் சொல்லி இருந்தாங்க.”
“ஒரு நிமிஷம் மேடம்.” என்று சொன்ன காவலாளி, தன் ஃபோனை எடுத்து யாருக்கோ அழைப்பு விட.
தனக்கு முன்னால் தெரியும் கடல் பக்கம் பார்வையை திருப்பினாள், ஆராதனா.
“மேடம், நீங்க உள்ள போங்க.” என்று காவலாளி சொல்ல, அவரை திரும்பிப் பார்த்தவள், சின்ன தலை அசைப்புடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள்.
பிரமாண்டமாக இருந்தது, அந்த கடற்கரை பங்களா, அவள் வீடு இதை விட பிரமாண்டமாக இருக்கும். ஆனால்… இந்த நேரம் எதையும் நினைக்க வேண்டாம் என, தனக்குள் சொல்லிக் கொண்டவள்.. ஹாலில் இருந்த சோஃபாவில் அமர, அவளுடைய ஃபோன் அடித்தது.
“மேல மாடியில, ரெண்டாவது ரூம் வந்துடுங்க.” என்ற கட்டளை வர, “ம்ம்…” என்றவள் படியில் ஏற ஆரம்பித்தாள்.
ஆராதனா, அந்த அறைக்குள் நுழைய… பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சத்தம், மெல்ல நடந்து வந்தவள், அங்கிருந்த ஃசோபாவில் அமர்ந்தபடி உள்ளுக்குள் எழும் பதட்டத்தை அடக்க நினைத்து, அந்த அறையை பார்வையிட ஆரம்பித்தாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்க, திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தாள், ஆராதனா.
இடையில் துண்டுடன் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தவன், ஆதிகேசவ பாண்டியன். முப்பத்தி நான்கு வயது என்று சத்தியம் செய்து சொன்னாலும், யாரும் நம்ப மாட்டார்கள். மாநிறம், உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய புஜங்கள், செதுக்கி வைத்த தேகம், அவன் உயரமும், உடல் அமைப்பும் யாரையும் பிரமிக்க வைக்கும்.
அவனைப் பார்த்ததும், ஆராதனா எழுந்து நிற்க… அதை கவனித்தாலும், தன் போக்கில் தலை துவட்டியபடி நடந்தவன், அந்த அறையின் கதவை தாழிட்டு மூட, ஆராதனாவின் உடலில் சட்டென ஒரு நடுக்கம்.
சன்னல் கேர்டன்ஸ் எல்லாம் இழுத்து விட்டு மூடியவன், அந்த அறையின் இருளைப் போக்க, சின்ன நைட் லாம்பை போட்டு விட்டு, தன் கையில் இருந்த துண்டை அருகில் இருந்த சோபாவில் போட்டவன், மெல்ல ஆராதனாவை பார்க்க, தலை குனிந்தபடி நின்றிருந்தாள், பெண்.
மெல்ல எட்டு வைத்து அவளை அவன் நெருங்கி வர, பெண்ணவள் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்க… பயத்தில் இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டாள், ஆராதனா.
பெண்ணவளை நெருங்கிய ஆதி, மெல்ல அவள் தோள் தொட்டு தன் பக்கம் திருப்ப, கண் மூடி தலை குனிந்திருந்தவள் தாடையை ஒரு விரல் கொண்டு நிமிர்ந்தியவன், அவளின் மூடியிருந்த கண்கள் முத்தமிட, ஆராதனாவின் உடல் வெளிப்படையாக நடுங்கியதுடன், அவள் கண்களும் கலங்கி வழிய…
பட்டென தன்னிடமிருந்து அவளை விலக்கி நிறுத்தியவன், இத்தன கஷ்டப்பட்டு நீ என்னை சகிச்சிக்க வேணாம், நீ கிளம்பு என்று விட்டு, ஜன்னல் அருகில் சென்று நின்ற படி, சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான்,
ASIN : B0DTW3LS83
Language : Tamil
File size : 3.0 MB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 104 pages