Price: ₹342.00
(as of Jun 06, 2025 10:42:28 UTC – Details)
முன்னோட்டம்…
கட்டில் அறையில் சகல அலங்காரத்தோடு அம்சமாய் இருக்க அதற்கு பொருந்தாதவாறு சிகப்பு நிற புடவையில் கண்ணீர் வடித்த முகத்தோடு அமர்ந்து கொண்டிருந்தாள் மேனகவர்ஷினி…
கழுத்தில் அவளை எகத்தாளமாக பார்த்தது அந்த தாலி தனக்கே தெரியாமல் என திருமணம் இப்பொழுது முதல் இரவு நினைத்தாலே உடல் கொழுந்து விட்டு எறிந்தது..
அதே சமயம் கருப்பு நிற சட்டை வெள்ளை நிற வேஷ்டி அணிந்து கொண்டு அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வமித்ரன்..
“இப்படி அழுதே டிராமா போடலாம்னு இருக்கியா எனக்கு இதுக்கெல்லாம் நேரமில்லை ஒழுங்கா படு”
என்று உணர்வற்ற குரலில் சொல்ல..
“நீங்க நினைக்கிற மாதிரி நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது நீங்க என்னோட பர்மிஷன் இல்லாம தாலி கட்டி இருக்கீங்க இப்ப படு என்று சொன்னா என்ன அர்த்தம் நான் விபச்சாரி கிடையாது”என்று முகத்தை திருப்பிக் கொள்ள..
“என்கிட்ட இந்த திமிர் எல்லாம் காட்டாத அதுவும் நான் பேசிக்கொண்டிருக்கும் போது முகத்தை திருப்புவது எனக்கு சுத்தமா பிடிக்காது”என்று அவள் கன்னத்தைப் பிடித்த தன்னை பார்க்க செய்ய
“இங்க பாருங்க நான் எந்த தப்பும் பண்ணல நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க”என்று விட்டால் அழுது விடுவேன் என்பது போல் அவள் கதற
“எப்படி எப்படி அந்த ஓடுகாலிக்கு எல்லா உதவியும் பண்ணிட்டு நான் எதுவும் பண்ணலன்னு சொல்ல வரியா என்னை என்ன சொன்ன மிருகம் ராட்சசன் உணர்வே இல்லாத ரோபோ அவன் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டான் அப்படித்தானே சொன்னேன் எதுவுமே பண்ணாம நீயே ரிவ்யூ கொடுத்தா எப்படி? நீ சொன்ன எல்லாத்துக்கும் உன்கிட்ட எல்லாமே பண்ணிட்டு ரிவ்யூ நீயே கிளியரா சொல்லிடலாம் இல்லையா அப்பதானே கல்யாணம் வேண்டாம்னு ஓடிப் போனவளுக்கு என்னோட பராக்கிரமம் பத்தி தெரியும்”
என்று நக்கலாக பேசிக்கொண்டே அவளை நெருங்கி வர பயத்தில் அவள் தூரம் விலக எரிச்சல் அடைந்தவன் அவள் இடுப்பு சேலை மடிப்பை அப்படியே கைவிட்டு பிடித்து தன் பக்கம் இழுத்து நிற்க வைத்தவன்
“அவ பண்ண தப்புக்கு அவளுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் அவர் தப்பு பண்ண தூண்டிவிட்டு உனக்கு கொடுமையான தண்டனை என்கிட்ட இருந்து கிடைக்கும்”
என்று சொல்லி அப்படியே அவளை கட்டிலில் தள்ளி அவள் மீது படர ஆரம்பித்தான் அவன்..
யாருக்கும் அடங்காத சிம்ம சொப்பன மவன் ஒரு சிறு பெண்ணின் கேளிக்கு ஆளாகி விட்டோமே என்று கோபத்தில் அவளை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறான். உடலை ஆக்கிரமிப்பு செய்வதால் மட்டும் காதல் வரப்போகிறதா என்ன அதற்குள் இருக்கும் மனதை யார் அறிவார்.??
ASIN : B0FB3L6S6T
Language : Tamil
File size : 323 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 168 pages