Price: ₹49.00
(as of Jul 24, 2025 01:34:12 UTC – Details)
இரண்டு வெகுஜனப் பத்திரிகைகளான அவள் விகடன் மற்றும் மல்லிகை மகள் ஆகியவற்றில் நான் தொடராக எழுதியவைதான் இந்தத் தொகுப்பு..
சிலருக்கு ஆங்கிலம் பேச, எழுத தயக்கங்கள் உள்ளன. அந்த தயக்கத்தைப் போக்குவதுதான் இந்நூலின் நோக்கம். தமிழ்வழி, ஆங்கிலவழி பயின்றவர்களும் இதில் அடக்கம். ஏனெனில் என் வகுப்பில் இவர்களின் பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுத்திருக்கிறேன். ஆங்கில சேனல்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பேசுகிறவர்கள் யாரும் நல்ல ஆங்கிலம் பேசுகிறவர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் தைரியமாக வெளுத்துக்கட்டுகிறார்கள். அந்த மனோபாவம் இருக்கவேண்டும். அடிப்படை தெரிந்துகொண்டால் இன்னும் நலமாக இருக்கும்..
அந்த அடிப்படையைத்தான் அத்தியாயங்களாக வைத்திருக்கிறேன். A, an, the பயன்படுத்துவதில்தான் நிறையப்பேர் கோட்டைவிடுகிறார்கள். Follow up words, Signal words, என்ற அத்தியாயங்கள் உங்கள் மொழித்திறனை மேம்படுத்தும். Active voice, Passive voice பற்றி நன்றாக தெரிந்துகொண்டாலே பாதி ஆங்கிலம் வந்த மாதிரி. அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். Isn’t it என்பதன் பல வடிவங்கள் குறித்து ஓர் அத்தியாயத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. நுனிநாக்கு ஆங்கிலம் பேசலாமா என்று தனியாக ஓர் அத்தியாயம் கொடுத்திருக்கிறேன். அதில் உள்ளபடி பேசிப் பழகுங்கள். You will feel the difference and gain confidence.
யாரும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் இல்லை. நானும் அப்படித்தான். நீங்களும் அப்படியே. ஏனெனில் மொழிப்புலமை பயிலப்பயிலத்தான் வரும்.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட அச்சு நூலின் பின் அட்டையில் வந்த அறிமுகம்:
ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஏராளமான புத்தகங்கள் உள்ளன என்றாலும் அவற்றில் பெரும்பாலனவை வாசிக்கவும் கற்கவும் கடினமானவையாக இருக்கின்றன. ஏராளமான இலக்கண விதிமுறைகளைச் சலிப்பூட்டும் நடையில் அளிக்கும் இந்த புத்தகங்கள், “ ஐயோ ஆங்கிலமே வேண்டாம்” என்று நம்மை அலறச்செய்துவிடுகின்றன.
இப்புத்தகம் அப்படிப்பட்டதல்ல.
•நட்பான எளியமொழி
•அன்றாட பேச்சு வழக்கு சார்ந்த உரையாடல்கள்
•இலக்கணம் இத்தனை சுலபமானதா என்று வியக்கவைக்கும் அறிமுகம்
•சுவையான, மறக்கவே முடியாத எடுத்துக்காட்டுகள்
•இளைஞர்களையும், மாணவர்களையும் கவர்ந்திழுக்கச் செய்யும் கற்பித்தல் உத்திகள்
முழுக்க முழுக்க உரையாடல் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஆங்கிலத்தின் மீதான அச்சத்தைப் போக்கி, என்னாலும் ஆங்கிலத்தில் தடையின்றி எழுதவும் பேசவும் முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
ஈஸியா கத்துக்கலாம் வாங்க!!
ASIN : B09272RDZ9
Language : Tamil
File size : 2.8 MB
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 204 pages
Best Sellers Rank: #142,328 in Kindle Store (See Top 100 in Kindle Store) #10,059 in Self-Help eBooks #18,289 in Self-Help #22,744 in Personal Transformation
Customer Reviews: 4.7 4.7 out of 5 stars 4 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });